டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 14% குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.8% குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 22,270 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,11,230 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை காட்டிலும் 14% குறைவானதாகும்
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 325 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,11,230 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரேந ளில், 60,298 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,20,37,536 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 2,53,739 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெ பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 175.03 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.