டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  24,963 பேர் குணமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி , 271 பேர் பலியாகியும் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணி வரை  நிலவரப்படி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும்  21,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,15,569ஆக உயர்ந்துள்ளனது.

நேற்று புதிதாக மேலும் 271 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதால்,   மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,50,127 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 24, 963 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33225221 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தொற்று காரணமாக  240221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று 50,17,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 93,17,17,191 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.