டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,08,921 பேர் பாதிப்பு 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று தொற்று பரவல் 2 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று மீண்டும் 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் வடமாநிலங்களில் குறைந்தும், தென்மாநிலங்களில் அதிகரித்தும் காரணப்படுகிறது.  தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிவருகிறது. கடந்த 10 நாட்களாக தொற்று பரவல் சற்றே குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 208,921 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனாவ்ல மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,71,57,795 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேர் கொரோனாவுக்கு பலியாகிய உள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  3,11,388  ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2,95,955 பேர் குணமடைந்த  நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,43,50,816 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24,95,591ஆக  உள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 20,06,62,456

இதனிடையே, தொற்று பாதிப்பை கண்டறிய இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் 22.17 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை எண்ணிக்கை இதுவேயாகும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 33 கோடியே 48  லட்சத்து 11 ஆயிரத்து 496- ஆக உள்ளது.