டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், 805 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு மருத்துவ நிபுணர்களிடையே அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. நேற்று 733 பேர் உயிரிழந்துள்ளத நிலையில் இன்றுமேலும் அதிகரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4.57 லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் 100கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், டிசம்பருக்குள் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 1ந்தேதி முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு 15ஆயிரம் என்ற நிலையில்இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அக்டோபர் 21ம் தேதி இந்தியாவில் கொரோனா காரணமாக 231 பேர் பலி என அறிவிக்கப்பட்ட நிலையில், 22ந்தேதி அன்று திடீரென மும்மடங்கு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, கொரோனா உயிரிழப்பு ஏறி இறங்கி காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 26ந்தேதி 585 பேர் உயிரிழந்ததுடன், 27ந்தேதி 733 பேர் உயிரிழந்துள்ளனர். 28ந்தேதி மேலும் அதிகரித்து கொரோனா உயிரிழப்பு 805 ஆக உயர்ந்துள்ளது. இது மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 14,348 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,46,157ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 1,61,334 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 805 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,191 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் 13,198 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,36,27,632ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று 74,33,392 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 1,04,82,00,966 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 16.9% பேருக்கும், 45 வயது முதல் 60வயதுகள் வரை உள்ளோருக்கு 26.8%, 18முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 56.3% பேரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.