டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.  தினசரி பாதிப்பு 15ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,313  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன் 26,579 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  சிகிச்சை பலனின்றி 181 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 8மணி  நிலவரம்) கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 14,313  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,85,920 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று  மேலும் 181 பேர் சிகிச்சை பலனின்றி  பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,50,963 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  26,579 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,14,900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று  65,86,092 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 95,89,78,049  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.