டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர் உயிரிந்துள்ளனர்.

கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. நேற்று முன்தினம் (ஜூன் 1ந்தேதி)    1.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 3,207 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது உயிரிழப்பு குறையத் தொடங்கி உள்ளது. நேற்று (ஜூன் 2ந்தேதி)  2887 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு வெகுவாக குறையத்தொடங்கி உள்ளது. அதுபோல பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மக்களிடையே  வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,84,41,986 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 2,887ஆக பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,37,989 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 2,11,499 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,13,413 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை  22,10,43,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.