டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1086 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்து வந்த கொரோனா மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது.  இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் புதிதாக மேலும்  1,086 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,30,925ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மேலும்  71 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,487 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,198 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,97,567 ஆக உயர்ந்துள்ளது. ணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,871 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,85,04,11,569 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,49,699 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் பதிலளித்தார். அப்போது,  4-ந்தேதி வரை  நாடு முழுவதும, 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மத்திய, மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அடிப்படையில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படுவதாக கூறிய பாரதி, இழப்பீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.