சுவிட்சர்லாந்து:
லகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேரியாவுக்கு எதிரன போராட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது, கடந்த 2000 ஆண்டு கணக்குப்படி 20 மில்லியனிலிருந்து, மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5.6 மில்லியனாக குறைக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
திங்களன்று வெளியிடப்பட்ட 2020 உலக மலேரியா அறிக்கையில்  தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகளவில் மலேரியா நோயாளிகள் சுமார் 229 மில்லியனாக உள்ளனர், இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளாக மாறாமல் அப்படியே உள்ளது.
கடந்த ஆண்டு மலேரியா நோயால் சுமார் 4,09,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டு மலேரியாவால் 4,11,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைப் பற்றி பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான ரெட்ராஸ் அதனோம் கிப்ரியாசிஸ் தெரிவித்துள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக உலகத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் இருந்து வருகிறது, ஆனால் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில், குறிப்பாக இந்தியா வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, கடந்த ஆண்டு இந்தியாவில் மலேரியாவால் 74% இறப்புகள் குறைக்கப்பட்டுள்ளன, மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனிலிருந்து சுமார் 6 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது, 2000-2019 வரை இந்தியாவில் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் சுமார் 3% பேர் உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது, என டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.