அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு முதல் டெஸ்ட்டில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணியில், பிரித்விஷா, மயங்க் அகர்வால், புஜாரா, விராத் கோலி, ரஹானே, ஹனுமன் விஹாரி, விருத்திமான் சஹா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

துவக்க விரர்களாக பிரித்விஷா மற்றும் அகர்வால் இறங்கினர். ஆனால், பிரித்விஷா, மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக்அவுட் ஆனார். தற்போது அகர்வாலும், புஜாராவும் நிதான ஆட்டம் ஆடி வருகின்றனர். வெளிநாட்டு மண்ணில், இந்திய அணி ஆடும் முதல் பகலிரவு டெஸ்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில், ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், டிம் பெய்னே, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.