இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Must read

அடிலெய்டு:
ந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகளை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸி.யும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றின.

இதை தொடர்ந்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் இன்று காலை அடிலெய்டு ஓவல் அரங்கில் தொடங்குகிறது. இப்போட்டி வெளிநாட்டில் இந்தியா விளையாடும் முதல் பகல்/இரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இளஞ்சிவப்பு வண்ணப் பந்து பயன்படுத்தி இந்தியா விளையாடும் 2வது பகலிரவு டெஸ்ட் போட்டி இது. ஏற்கனவே 2019, நவம்பரில் வங்கதேசத்துக்கு எதராக, முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியது. கொல்கத்தாவில் நடந்த அந்தப் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ், 46 ரன் வித்தியாசத்தில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது’.

More articles

Latest article