சீனாவில் இருந்து வரும் நிறுவனங்களுக்கான இடங்களை வழங்க தயாராகிறது இந்தியா

Must read

புது டெல்லி:

சீனாவில் இருந்து வெளியேறு நிறுவனங்களை ஈர்க்க அதிக இடவசதி செய்து கொடுக்க இந்த தயாராகி வருகிறது.

இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லக்ஸம்பேர்க்கை விட இரு மடங்கு அளவை கொண்ட இடத்தை ஒதுக்க இந்தியா தயாராகி வருகிறது.  நாடு முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 589 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.  அதில் அடங்கும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தற்போதுள்ள 1 லட்சத்து 15 ஆயிரத்து 131 ஹெக்டேர் தொழில்துறை நிலங்கள் இடம் பெற்றுள்ளன. லக்ஸம்பர்க் 2 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு நிலம் கிடைப்பது மிகப்பெரிய தடையாக உள்ளது. சவுதி அராம்கோ முதல் போஸ்கோ வரை திட்டங்கள் கையகப்படுத்துவதில் தாமதத்தால் விரக்தியடைந்துள்ளன.  கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஒரு உற்பத்தித் தளமாக சீனாவை நம்புவதை முதலீட்டாளர்கள் குறைக்க முற்படுவதால், அதை மாற்ற இந்திய பிரதமர் மோடி, மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தற்போது, ​​இந்தியாவில் ஒரு தொழிற்சாலை அமைக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் சொந்தமாக நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இந்த செயல்முறை, சில சந்தர்ப்பங்களில், சிறிய நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் திட்டத்தை தாமதப்படுத்தி வருகின்றன.


மின், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மின்னணுவியல், கனரக பொறியியல், சூரிய உபகரணங்கள், உணவு பதப்படுத்துதல், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி ஆகிய 10 துறைகளை சேர்ந்த நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு விரும்புகிறது

வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும் துறைகளை அடையாளம் காண வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களை இந்தியா கேட்டுள்ளது.   அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியா, முக்கியமாக ஜப்பான், யு.எஸ்., தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து இது குறித்து தூதரங்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இதில் பெரும் பாலான நிறுவனங்கள் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்று தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என்று மக்கள் தெரிவித்தனர். மேற்குரிய நான்கு நாடுகளும் இந்தியாவின் 12 வர்த்தகங்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. மொத்த இருதரப்பு வர்த்தகம் 179.27 பில்லியன் டாலர்களாக இருந்து வருகிறது. ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2019 வரை நான்கு நாடுகளின் அந்நிய நேரடி முதலீடுகள் 68 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வலுவான உள்கட்டமைப்பைக் கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயன்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்துவது குறித்து இந்தியா ஆய்வு செய்கிறது. இருப்பினும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான விரிவான திட்டம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இதுகுறித்து பேசிய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 30 ம் தேதி முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.  வடக்கு மாநிலமான உத்தரபிரதேசம் அனைத்து தொழில்துறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான ஆன்லைன் முறையையும் உருவாக்கி வருகிறது, மேலும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலகளாவிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

More articles

Latest article