புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாமை குண்டு வைத்து தகர்த்த இந்திய ராணுவம், “ எதிரிகள் முன்னால் அமைதியாக இருந்தால் கோழை என்றே கருதுவார்கள் “ என பொருள்படும் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

indian

புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியது. பாலாகோட் என்னும் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது 12 போர் விமானங்களை கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையின் இத்தகைய துல்லிய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிரிகள் முன்னால் அமைதியாக இருந்தால் கோழை என்றே நினைப்பார்கள், வலிமை சூழந்தவர்களாக இருப்போம் என பொருள்படும் வகையில் கவிதை ஒன்று இந்திய ராணுவத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்திக் கவிஞர் ராம்தாரி சிங் எழுதிய கவிதை இந்திய ராணுவத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் டிவிட்டர் கவிதை வரிகள்,

அமைதியாகவும் கீழ்படிகிறவர்களாகவும்

நீங்கள் இருந்தால்,

உங்களைக் கோழை என்றே

எதிரிகள் கருதுவார்கள்.

பாண்டவர்களைக்

கெளரவர்கள் நடத்தியதுபோல நடத்துவார்கள்.

வலிமையான இடத்திலும்

வெற்றி பெறும் நிலையிலும்

இருந்தால் மட்டுமே,

உங்களால்

அமைதியைப் பற்றிப் பேசமுடியும்.

என பதிவிடப்பட்டுள்ளது.