ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மார்ட்டின் குப்திலும் நிக்கோல்ஸும் நல்ல துவக்கம் தந்தனர்.

குப்தில் 79 ரன்கள் அடித்தார். மற்றொரு வீரர் ராஸ் டைலரும் அரைசதம்(73) அடித்தார். நிக்கோல்ஸ் 41 ரன்கள், பிலன்டல் 22 ரன்கள் மற்றும் ஜெமிஸன் 25 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களே அடித்தனர்.

இந்தியா தரப்பில், மிகச்சிறப்பாக பந்துவீசிய ஆல்ரவுண்டர் ஜடேஜா, 10 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

சாஹல் 58 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், தாகுர் 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆனால், அதிகபட்சமாக 64 ரன்களைக் கொடுத்த பும்ரா 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இன்றைய நாளும் அவருக்கு மோசமான நாளாகவே அமைந்தது.

இந்தியா வெற்றிபெற 50 ஓவர்களில் 274 ரன்கள் தேவை.