
கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை குவித்து, இந்தியாவுக்கு சற்று சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மென்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ஆனால், ஓவர்கள் செல்ல செல்ல, விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், அவர்கள் அதிரடிக்கு மாறினர்.
ஹெட்மேய்ர்தான் முதன்முதலாக அதிரடிக்கு மாறினார். அவர் 33 பந்துகளில் 37 ரன்களை அடித்து சைனி பந்தில் பவுல்டாக, அடுத்து பூரானும், கேப்டன் பொல்லார்டும் ஆட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
40வது ஓவருக்கு மேல், ஆட்டத்தின் போக்கை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். பூரான் 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 89 ரன்களை விளாசினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பொல்லார்டு 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 74 ரன்களை வெளுத்தார்.

கடைசி கட்டத்தில் இந்திய பவுலிங் எடுபடவே இல்லை. சைனிக்கு 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷமி மற்றும் தாகூருக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன. ஜடேஜாவின் பந்துவீச்சு மட்டுமே கொஞ்சம் எகனாமிக்காக இருந்தது.
இந்திய அணி, 315 ரன்களை எளிதாக எட்டிப் பிடிக்குமா? அல்லது தடுமாறுமா?
கடந்த 2 போட்டிகளில் ஏனோதானோவென ஆடிய கேப்டன் விராத் கோலி, இன்று தனது இன்னொரு முகத்தைக் காட்டுவாரா?
[youtube-feed feed=1]