கட்டாக்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, 24 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், நிதானமாக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. கட்டாக் பரபதி மைதானம் நல்ல பேட்டிங் பிட்ச் என்று கூறப்படுகிறது.
துவக்கத்தில் மிக நிதானமாகவே ஆடத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், விக்கெட்டுகளை இழக்கவில்லை. பின்னர், ஜடேஜா எவின் லீவிஸின் விக்கெட்டை எடுக்க, அடுத்த ஓவரிலேயே 42 ரன்கள் எடுத்திருந்த ஹோப்பின் விக்கெட்டை முகமது ஷமி எடுத்தார்.
தற்போது ராஸ்டன் சேஸும், ஹெட்மேய்ரும் ஆடி வருகின்றனர். இந்திய அணியின் ஃபீல்டிங் இன்று சற்று சொதப்பலாக இருப்பதையும் கவனிக்க முடிகிறது. குறிப்பாக, கீப்பிங்கில் ரிஷப் பண்ட் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
இது கோப்பையை வெல்லக்கூடிய போட்டி என்பதால், இரு அணிகளுமே வெற்றியில் முனைப்புக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.