உலகளவில் சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 25 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

லண்டனில் உள்ள் டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் எமர்ஜிங் எகானமிஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஆண்டுதோறும் உலக நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கன சிறந்த 200 பலகலைக்கழகங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. அதேப்போன்று இந்தியாவை சேர்ந்த 25 பல்கலைக்கழகங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் பல்கலை. 14வது இடத்திலும், மும்பை ஐஐடி 27வது இடத்திலும், இந்தூர் ஐஐடி 61வது இடத்திலும், ஜேஎஸ்எஸ் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் & ரிச்ர்ச் பல்கலை. 64வது இடத்திலும் உள்ளன.
உலகளவில் வெற்றிக்கான ஆற்றலை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் கற்பித்தலை மேலும் வலுப்படுத்தினால் நாட்டை உலகளவில் உயர்த்த முடியும். நமது நாட்டை சேர்ந்த மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை புரிய முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]