டில்லி

பாகிஸ்தானுடன் துருக்கி நெருக்கமாக உள்ளதால் இந்திய போர்க்கப்பல்கள் கட்டப்படும் ஒப்பந்தம் ரத்து ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் இந்தியாவுக்கான 45 ஆயிரம் டன் எடையுள்ள 5 போர்க்கப்பல்கள் கட்டப்பட உள்ளது.   இதற்கான ஒப்பந்தப் புள்ளி கடண்டஹ் ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.  துருக்கி நாட்டைச் சேர்ந்த டி ஏ ஐ எஸ் என்னும் கப்பல் கட்டும் நிறுவனம் மிகக் குறைந்த தொகையை அளித்ததால் இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு 230 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தற்போது இதே நிறுவனத்துடன் பாகிஸ்தான் நாட்டுக் கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.   இந்த நிறுவனம் பாகிஸ்தானுக்காக 4 போர்க் கப்பல்கள் மற்றும் 30டி123 ரக  போர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை தயார் செய்ய உள்ளது.

இந்துஸ்தன் ஷிப் யார்ட் நிறுவனம் அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படும் தளம் உள்ளது.   அத்துடன் கிழக்குக் கடற்படை தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.  எனவே துருக்கி நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களை இங்கு அனுப்புவதில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.

எனவே இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் துருக்கி நாட்டுடனான இந்த ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.   அத்துடன் பாதுகாப்பு கருதி துருக்கியுடனான இந்த 230 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் இந்தியாவால் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.