உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

india

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ளது. உள்ளூர் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றி உள்ள நிலையில் பிரான்ஸ் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே நேர்த்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்த அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் சீனாவும், 3வது இடத்தில் ஜப்பானும், 4வது இடத்தில் ஜெர்மனியும் உள்ளன.

மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து அதன் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக பி.டயிள்யூ.சி. தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் பி.டயிள்யூ.சி. நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்து, பிரான்சுமே 5 மற்றும் 6வது இடத்தில் இருந்து வந்தன. தற்போது இங்கிலாந்தின் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களின் மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]