டில்லி
இந்தியாவில் அதிகரித்து வரும் வன விலங்குகளை கருணைக் கொலை செய்து, மக்களைக் காக்க அரசு திட்டமிடுவதாக ஒரு செய்தி கூறுகிறது.
வனவிலங்குகளில், யானை, குரங்கு, காட்டெருமைகளின் தொகை அதிகரித்து வருகிறது.
உணவு, தண்ணீர் ஆகியவற்றை தேடி விலங்குகள் நாட்டிற்குள் வருவது அதிகரித்துள்ளது.
இந்த விலங்குகளால், மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் மிகவும் சேதம் ஏற்படுகிறது.
இதனால் வனவிலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒரு இயக்கம் 2031க்குள் நிறுவப்பட உள்ளது.
இதன் படி அனைத்து வனவிலங்குகளும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக ஆனால் அவற்றை கொலை செய்யலாம் என திட்டம் வரக்கூடும் என தெரிகிறது
இந்த நடைமுறை ஏற்கனவே சில மேலைநாடுகளில் கடைபிடிக்கப் படுகின்றது.
ஆனால், யானையை பிள்ளையார் எனவும், குரங்கை அனுமான் எனவும் கும்பிடும் நம் நாட்டில் இது சாத்தியமா என தெரியவில்லை.
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி இது நடக்குமா எனவும் சந்தேகம் உள்ளது.
ஏற்கனவே, வனங்களை மனிதன் ஆக்கிரமிப்பதால் வனவிலங்குகள் நாட்டில் புகுந்து விடுகின்றன என சிலர் கூறுவது உண்டு.
இந்த திட்டம் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பது இன்றைய நிலையில் ஒரு பெரிய கேள்விக்குறியே