டெல்லி:
கடந்தஆண்டில் மட்டும் இணைதள சேவை முடக்கத்தால் இந்திய பொருளாதாரம் ரூ. 1.3 பில்லியன் டாலருக்கு அதிகமான இழப்பை சந்தித்து உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு (2019) இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது இணையதள சேவைகள் முடக்கப் பட்டன. குறிப்பாக தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் சிசிஏ போன்றவைகளால் ஏற்பட்ட வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக அவ்வப்போது இணையதள சேவைகள் பல மாநிலங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இதுபோன்ற காரணங்களால் 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு 1.3 பில்லியன் டாலர் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ’டாப் 10 வி.பி.என்.’ தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் (2019) 106 முறை இணையதள சேவைகள் முடக்கப்பட்டதாகவும், மொத்தம் 4,196 மணி நேரம் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது என்றும் கூறி உள்ளது. இந்த தகவல்கள், இலாப நோக்கற்ற சட்ட சேவைகள் அமைப்பான மென்பொருள் சுதந்திர சட்ட அறக்கட்டளையால் தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆய் செய்யப்பட்டதாகவும் விவரித்து உள்ளது.
உலகெங்கிலும் இணைய பணிநிறுத்தங்களுக்கான மொத்த செலவு, 2019 ஆம் ஆண்டில் 8.05 பில்லியன் டாலராக இருந்தது, இது 2015-16 முதல் 235 சதவீத அதிகரிப்பு ஆகும்.
மேலும், இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டதில் சர்வதேச அளவில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாகவும், முதலிடத்தில் ஈராக்கும், 2வது இடத்தில் சூடானும் உள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜம்மு காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இணையச் சேவை முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள ஆய்வு முடிவுகள், இணையச் சேவை முடக்கப்பட்டதால் நாடு முழுவதும் 84 லட்சம் பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.
இணையதள சேவை முடக்கம் காரணமாக நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது என்றும், கடந்த ஆண்டுகளை விட 2019ஆம் ஆண்டில்தான் இணையச் சேவை முடக்கத்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆய்வு முடிவுகள், இதனால் ஏற்பட்டுள்ள உண்மையான அளவு மேலும் அதிக அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மட்டும் இணையதளச் சேவை முடக்கத்தால் அப்பகுதியில் கல்வி, சுகாதாரம், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. மேலும் ரூ. 1.1 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 4 ம் தேதி விதிக்கப்பட்ட காஷ்மீரில் இணைய முடக்கம் போல வேறு எந்தவொரு நாட்டிலும், இவ்வளவு நீண்ட காலம் இணையதள சேவை முடககப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. காஷ்மீரில் இணைய அணுகல் துண்டிக்கப்பட்டு இப்போது 158 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
‘குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த விவகாரத்தில் வட கிழக்குப் பகுதிகளில் இணையச் சேவையை முடக்கியதால் 102 மில்லியன் டாலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இணைச் சேவை முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பு 63 மில்லியன் டாலராகும்.
சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (இக்ரியர்) ஏப்ரல் 2018 இன் அறிக்கை 2012-17 முதல் இந்தியாவில் இணைய பணிநிறுத்தங்களின் பொருளாதார தாக்கத்தை 3.04 பில்லியன் டாலராக மதிப்பிட்டுள்ளது, மேலும் பணிநிறுத்தம் செய்யப்பட்ட மணிநேரங்களின் எண்ணிக்கை 16,315 மணிநேரமாக இருந்தது.
கடந்த ஆண்டு இணைய பணிநிறுத்தங்களால் இந்தியா 1.3 பில்லியன் டாலர்களை இழந்தது என்று ஆய்வு கூறுகிறது
இதற்கு நேர்மாறாக, இணைய பணிநிறுத்தங்களிலிருந்து அதிக பொருளாதார தாக்கத்தை சந்தித்த ஈராக், 2.3 பில்லியன் டாலர் மற்றும் 209 மணிநேர சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. சூடான் இரண்டாவது மிக உயர்ந்த தாக்கத்தை 1.87 பில்லியன் டாலர்களாகவும், 864 மணிநேர இருட்டடிப்புகளையும் சந்தித்தது.
அதுபோல, உலகளவில்அதிக எண்ணிக்கையிலான பணி முடக்கத்தை எதிர்கொண்டகண்ட தளம் வாட்ஸ்அப் என்றும் சுமார், 6,236 மணி நேரம் முக்கப்பட்டது என்றும், 2வதுஇடத்டிதல் பேஸ்புக் நிறுவனம் உள்ளதாகவும், அது உலகளவில் சுமார் 6,208 மணி நேரம் தடுக்கப்பட்டது, 3வதாக இன்ஸ்டாகிராம் (6,193 மணி நேரம்), 4வதாக டிவிட்டர் (5,860 மணி நேரம்) மற்றும் யூடியூப் (684 மணிநேரம்) முடக்கப்பட்டது