அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட 33 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

முதல் நாள் ஆட்டநேர முடிவின்படி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்தியா, இன்று ஆட்டம் தொடங்கி, அடுத்த 46 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.

இங்கிலாந்து பந்துவீச்சில், பகுதிநேர பந்துவீச்சாளரான கேப்டன் ஜோ ரூட், யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஜேக் லீச்சிற்கு இன்று 2  விக்கெட்டுகள் சேர்த்து மொத்தமாக 4 விக்கெட்டுகள் கிடைத்தன. ஆர்ச்சருக்கு 1 விக்கெட் கிடைத்தது.

இந்திய இன்னிங்ஸில், ரோகித் ஷர்மா 66 ரன்களும், கேப்டன் கோலி 27 ரன்களும், அஸ்வின் 17 ரன்களும் அடித்தனர். 3 பேட்ஸ்மென்கள் டக்அவுட்.

இங்கிலாந்தைவிட தற்போதைய நிலையில், 33 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 100 ரன்களுக்குள் சுருட்டினால், இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகலாம்.