புனே: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி, 35 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்துள்ளது.
கேஎல் ராகுல் 69 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் காயம்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக, ரிஷப் பன்ட் உள்ளே வந்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரின் நான்காவது இடத்தில் இந்தமுறை களமிறங்கியிருப்பவர் ராகுல். விக்கெட் கீப்பராக பன்ட் உள்ளார்.
துவக்க வீரர் ரோகித் 25 பந்துகளில் 25 ரன்களுக்கு அவுட்டானார். ஷிகர் தவான் 17 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் கோலி, 79 பந்துகளில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் ரன்விகிதம் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளது. 40 ஓவர்களுக்கு மேல் அடித்து ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் மோசமாக செயல்பட்ட குல்தீப் யாதவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட் தவிர, அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.