கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், முதலில் களமிறங்கிய இந்தியா, நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு முன்னதாகவே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
துவக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் மட்டுமே அரைசதம் அடித்து அவுட்டானார். ஷிகர் தவான் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, கேப்டன் கோலி 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.
பெரிதாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாமசன் 15 பந்துகளில் 23 ரன்களுடன் வெளியேற, மணிஷ் பாண்டே 8 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது ஹர்திக் பாண்ட்யா களமிறங்கியுள்ளார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதால், இனி அடுத்து ஆடவரும் வீரர்கள் அதிரடியாக ஆடாமல், தங்களின் விக்கெட்டுகளை தக்கவைக்கும் வகையில் மெதுவாக ஆடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், 14 ஓவர்களில், 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டு, வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணி 150 ரன்களையாவது எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.