இலங்கையில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அர்ஜீனா ரனதுங்க கூறினார்.

பால் பொருட்கள், அரிசி, எல்.பி.ஜி. சிலிண்டர், பெட்ரோல் ஆகிய அன்றாட தேவைகளுக்காக மக்கள் போராடி வரும் சூழலில் அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்காக போராடுபவர்களைப் போல் ராஜபக்சே அரசு சித்தரிக்கிறது.

உலகெங்கிலிலும் கொரோனா தொற்று பரவியபோதும் இங்கு மட்டுமே கொரோனாவால் பொருளாதாரம் சீரழிந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்வாக திறமையற்றவர்கள் அதிபர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று ரனதுங்க கூறினார்.

இந்தியாவில் இருந்து பொருளதவி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இங்குள்ள நிலைமையை ஆராய்ந்து பெட்ரோலிய மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பி உதவியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜீனா ரனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மருந்து பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும் இலங்கைக்காக இந்தியா வரிந்துகட்டி கொண்டு உதவுவது அந்நாட்டினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.