
சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் பயிற்சி போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட், வரும் 17ம் தேதி, பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இதற்கு பயிற்சிபெறும் விதமாக, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது இந்திய அணி. இதுவும் 3 நாள் போட்டிதான்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 194 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. புஜாரா மற்றும் பும்ரா, இப்போட்டியில் அரைசதம் அடித்தனர்.
ஆனால், ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் பிரித்து மேய்ந்தனர். இந்திய பவுலிங் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி வெறும் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஷமி, சைனி ஆகியோருக்கு தலா 3 விக்கெட்டுகளும், பும்ராவிற்கு 2 விக்கெட்களும் கிடைத்தன. இந்திய அணி 86 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]