அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 124 ரன்கைள மட்டுமே எடுத்துள்ளது.
இதன்மூலம், இங்கிலாந்திற்கு எளிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள் மோசமாக ஆடினார்கள். ரோகிர் ஷர்மா இந்தப் போட்டியில் சேர்க்கப்படவில்லை.
ஷ்ரேயாஸ் ஐயர், 48 பந்துகளில் 67 ரன்களை அடிக்கவில்லை என்றால், இந்தியாவின் நிலைமை படுமோசமாகியிருக்கும். அதிரடி மன்னன் ஹர்திக் பாண்ட்யாவும் ஏமாற்றினார்.
பலரும் பந்துகளை வீணாக்கியதால், இந்திய அணியின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது. இந்திய அணி சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே இப்போட்டியில் வெல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.