கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் மோசமான கார் விற்பனை: வாகன உற்பத்தியாளர்கள் கவலை

Must read

புதுடெல்லி:

உலக அளவிலான அசுர வேக பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்துள்ளது.


இந்திய ஆட்டோமோபைல் தயாரிப்பு அமைப்பினர் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கார் விற்பனை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14% குறைந்து, ஓராண்டுக்கு 2 லட்சத்து 47 ஆயிரத்து 541 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின.

கார் விற்பனை 20 சதவீதமும், ஒட்டுமொத்த வாகன விற்பனை 16 சதவீதமும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி டிசம்பருக்கு முந்தைய 3 மாதங்களில் 6.6 சதவீதமாக குறைந்தது.
6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகமாக இருப்பதால் ஆட்டோமோபைல் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

More articles

Latest article