டெல்லி:  18வது முதல் கூட்டத்தொடரில்  பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.  அபபோது  நாடு வேகமாக முன்னேறி வருகிறது உள்பட பல்வேறு  முன்னேற்றம்  துறைகளில் முன்னேற்றம்  அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்று முழு உலகமும் நம்மை ஜனநாயகத்தின் தாய் என்று மதிக்கிறது 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அரசின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக குதிரை  படை வீரர்கள்,  குடியரசு தலைவர் முர்முவை  ராஷ்டிரபதி பவனில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். நாடாளுமன்ற வாயிலில் சபாநாயகர் ஓம்பிர்லா, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்பட பலர் வரவேற்றனர்.

மக்களின் நம்பிக்கையை இந்த அவை நிறைவேற்றும். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்

  • தேர்தல் ஆணையத்துக்கு நன்றி
  • சபாநாயகர் மற்றும் எம்.பி.க்களுக்கு வாழ்த்து
  • உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது
  • இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்
  •  2036ல் இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளது
  • மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி
  • இன்று முழு உலகமும் நம்மை ஜனநாயகத்தின் தாய் என்று மதிக்கிறது
  • தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள்


18வது முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது. 18வது மக்களவையில், மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு வாழ்த்துகள்.

2024ஆம் ஆண்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திமுடித்த தேர்தல் ஆணையத்து நன்றி. 60 ஆண்டுகளுக்கு பின் மக்கள் ஒரே அரசை மூன்றாவது முறையாக அமர்த்தியுள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அரசின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஸ்திரமான அரசின் மூலமே மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்.  மேலும் ”காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.  இந்தியா இவ்வளவு பெரிய தேர்தலை வன்முறையின்றி நடத்தி முடித்தால், பெருமைப்பட வேண்டும்

இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் முக்கியமான திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறேன்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று, போர் என அனைத்தையும் கடந்து நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

 மேலும் சிறிய நகரத்துக்கும் விமான சேவை கிடைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவர் உரையாற்றும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இதேபோல் புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றி பேசும் போது “நீட் நீட்” என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 “2036ல் இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 125வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படும்.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.

தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்

55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

சமீபத்திய காகித கசிவு சம்பவங்கள் மற்றும் நியாயமான விசாரணைக்கு எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இதற்கு முன்பிருந்தே பல்வேறு மாநிலங்களில் பேப்பர் கசிவுகள் வருவதைப் பார்த்திருக்கிறோம், இதற்குத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும்.

“இன்று, நமது இளைஞர்கள் விளையாட்டிலும் புதிய வாய்ப்புகளைப் பெறுகின்றனர். எனது அரசின் திறம்பட முயற்சியின் விளைவாக, இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்கள், சர்வதேச அரங்கில், சாதனை எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் அ.தி.மு.க. சில நாட்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நினைத்து பெருமை கொள்கிறோம், இந்த சாதனைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல, 2036 ஒலிம்பிக்கை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் தயாராகி வருகிறது.

விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுகிறது.

சிறிய நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது

தேசத்தின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும்.

உலக பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு 15% உள்ளது.

பல புதிய சீர்திருத்தங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்படும்

கூட்டாச்சி தத்துவம் மற்றும் பரிபூரண ஒத்துழைப்பை நோக்கி இந்திய அரசு செயல்படும்.

மூன்றாவது முறையாக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரும் 20 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு வரவு வைக்கப்பட்டு உள்ளது.

காரீப் பருவ கால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியுள்ளது.

நவீன காலத்திற்கு ஏற்ப விவசாய அமைப்பு மாற்றப்பட்டு தற்போதைய தேவைகளை அறிந்து அதற்கு எற்ற வகையில் பயிரிடுவதற்கான வசதிகளை அரசு பெருக்கி உள்ளது.

உலகளவில் இயற்கை விவசாய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்திய விவசாயிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக உலகமே கொண்டாடியதாகவும் அதேபோல் அண்மையில் சர்வதேச யோகா தினத்தை உலகமே இணைந்து கொண்டாடியதை அனைவரும் பார்க்க முடிந்ததாக கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களை உற்பத்தியின் மையமாக அரசு மாற்றி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் அம்மாநிலங்களுக்காக 4 மடங்கு நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

கிழக்கு கொள்கை பிரிவின் நுழைவு வாயிலாக வடகிழக்கு பிராந்தியத்தை உருவாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டு வருவதாக குடியரசு தலைவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து இணைப்புகளும் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், அம்மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட அரசு போதிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.

கலவரம் மற்றும் பதற்றமான பகுதிகளில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டும், இரு பிரிவனருக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் அமைதி பேணிக் காக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, இளைஞர், இளம்பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கட்டமைக்க முடியும் என்றும் அதையே முதன்மையான முன்னுரிமையாக கொண்டு அரசு பணியாற்றி வருவதாகவும் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களின் வருவாயை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பெண்களின் வருவாயை அதிகரிக்கவும், அவர்களின் மரியாதையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.

மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் பெருக்க, சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பின்தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் ரூ.24,000 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம்.

“இன்று, இந்தியா பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலகில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டால், நாம் பெருமைப்பட வேண்டும்.

இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சந்திரனின் தென்பகுதியில் சந்திரயானை தரையிறக்கி சாதனை படைத்தனர்.

மேலும் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்கள் வகுக்குப்படும்.

உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.

இன்று முழு உலகமும் நம்மை ஜனநாயகத்தின் தாய் என்று மதிக்கிறது நாம் அதை பாதுகாக்க வேண்டும் .

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல்,  ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் என்றும்  திரவுபதி முர்மு கூறினார்.

இவ்வாறு கூறினார்.