டில்லி

விதி எண் 370 நீக்கப்பட்டது குறித்து ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய அரசு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கும் மசோதாவை மக்களவையில் அளித்தது. இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேறியது. நேற்றே ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் நேற்று மாநிலங்களவையில் இந்த நடவடிக்கை குறித்து கடுமையாக  விமர்சித்தார். மக்களவை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் தாஸ் இது குறித்த விவாதத்தில் இந்த தீர்மானம் அனைத்து சட்ட விதிளையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “தேசிய ஒருமைப்பாடு என்பது காஷ்மீர் மாநிலத்தைத் தனியாகப் பிரிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள் பிரதிநிதிகளைச் சிறையில் அடைப்பது மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது இலை. நாடு என்பது மக்களால் உருவாகிறதே தவிர நிலப்பரப்பினால் உருவாகவில்லை. மத்திய அரசு தனது அதிகாரத்தை இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்பைக் குழி தோண்டி புதைத்துள்ளது.