பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், தற்போதைய நிலவரப்படி இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர் ஷப்மன் கில் அருமையாக ஆடி 91 ரன்கள் அடித்து அவுட்டானார்.
ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன்கள் என்ற டார்கெட்டை நோக்கிய களமிறங்கியது இந்திய அணி. 4வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று இறுதிநாள் ஆட்டம் தொடங்கியது. ரோகித் ஷர்மா 7 ரன்களில் அவுட்டாக, மற்றொரு துவக்க வீரர் ஷப்மன் கில் 146 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 91 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பவுலர்களை அலறவிட்டார்.
கேப்டன் ரஹானே 21 ரன்களுக்கு நடையைக் கட்ட, சத்தீஷ்வர் புஜாரா தனது பொறுமையான ஆட்டத்துடன் களத்தில் நிற்கிறார். இதுவரை 192 பந்துகளை சந்தித்துள்ள அவர் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களை அடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக, மயங்க் அகர்வால் இறங்காமல், அதிரடி மன்னன் ரிஷப் பன்ட் இறக்கிவிடப்பட்டுள்ளார். ஒருபக்கம் புஜாரா நிதான ஆட்டம் ஆட, மறுபக்கம் ரிஷப் பன்ட் வெளுத்து வாங்க வேண்டுமென்பதுதான் திட்டம்.
தற்போதுவரை, 56 பந்துகளை சந்தித்துள்ள பன்ட், 1 சிக்ஸர் & 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களை சேர்த்துள்ளார்.
இந்த டெஸ்ட்டில், இந்திய அணி வென்றுவிட்டால், அது மாபெரும் வரலாற்று சாதனையாக அமையும் என்பல் சந்தேகமில்லை.