டில்லி
இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது.
இந்தியப் பெண்கள் தற்போது பல துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள “பெண் குழந்தைகளைக் காப்போம்” என்னும் திட்டத்தின் மூலம் அரசும் பெண்களின் முன்னேற்றத்துக்கு துணையாக உள்ளது. மேலும் பல பெண் தொழில் முனைவோரையும் தனது திட்டத்தின் மூலம் இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
தற்போது உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக அதிக அளவில் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்வதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
இந்திய பெண் விமான ஓட்டுனர்கள் சங்கத்தின் ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட சின்ஹா தனது உரையில், “இந்திய அரசுத் துறையான ஏர் இந்தியா, மற்றும் இந்திய விமானப் படை ஆகியவற்றை சேர்த்து கணக்கிடும் போது உலக நாடுகளிலேயே அதிக பெண் ஓட்டுனர்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பது தெரிய வட்னுள்ளது. விமானத்துறையில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. விமானத்தை கையாளுவதில் அவர்கள் திறமையுடன் செயல்படுவது குறிப்பிடத் தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.