சென்னை,
குடியரசு தலைவர் கேரள நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
நேற்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வுஎடுத்தார். தொடர்ந்து இன்று காலை தாம்பரம் விமானப்படை தள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்பித்தார்.
காலை 8.30 மணி கவர்னர் மாளிகையில் இருந்து கிளம்பிய பிரணாப் 8 மணி அளவில் தாம்பரம் விமான படை தளத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு விமானப்படை அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய விமானப்படை வீரர்களை கவுரவித்து சிறப்புரையாற்றினார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவித்தார். தாம்பரம் விமானப்படை தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவுக்கு தேசிய அங்கீகாரம் அளித்தார்.
தொடர்ந்து விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை ஏற்றுக்கொண்ட பிரணாப் விமானப்படை வீர்ர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது,
’இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது. நமது விமானப்படை தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்கிறது. விமான படையயின் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் என்றார்.
மேலும், விமானப்படை ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் சேவை செய்கிறது. விமானப்படையின் சேவை பாராட்டக்கூடியது.
தமிழக வெள்ள பாதிப்புகளின்போது வியத்தகு சாதனை படைத்தது விமானப்படை என்று புகழாரம் சூட்டினார்.
அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா முடிவுற்றது. தொடர்ந்து விமானப்படை தளத்தின் பதிவேட்டில் குறிப்பு பதிவு செய்தார்.
தொடர்ந்து விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி வருகையையொட்டி தாம்பரம் பகுதியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.