டில்லி
சர்வதேச அளவிலான செல்வ நிலை குறித்த மதிப்பீட்டில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளது.
ஆசிய வங்கி சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாடுகளின் செல்வ நிலை குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு ஒரு அறிக்கையாக தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை இப்போது ஆசிய வங்கி வெளியிட்டுள்ளது.
ஆய்வறிக்கையில், “சர்வதேச அளவில் செல்வ செழிப்பான நாடுகளில் அமெரிக்கா முதல் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கர்களின் சொத்துக்கள் மதிப்பு 65,584 பில்லியன் டாலர்களாக உள்ளது. இரண்டாவதாக சீனா (24803 பில்லியன் டாலர்கள்),, மூன்றாவதாக ஜப்பான் (19522 பில்லியன் டாலர்கள்), ஆகிய நாடுகள் உள்ளன. இந்த வரிசையில் இந்தியா 8230 பில்லியன் டாலர்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
நான்காவதாக இங்கிலாந்தும், ஐந்தாவதாக ஜெர்மனியும் இந்தியாவுக்கு முன்னாள் உள்ளன. அதே வேளையில், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பின்னால் உள்ளன.