டில்லி

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது.   இதுவரை 3.38 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 10.12 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

உலக அளவில் பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இந்தியா பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில் சற்றே ஆறுதல் தரும் விஷயமாக கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 51,84,634 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இரண்டாவதாக அமெரிக்காவில் 46,48 லட்சம் பேரும் மூன்றாவதாகப் பிரேசில் நாட்டில் 41.35 லட்சம் பேரும் குணம் அடைந்துள்ளனர்.

மரணமடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா 2.1 லட்சத்துடன் முதல் இடத்திலும், பிரேசில் 1.43 லட்சத்துடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 97.5 ஆயிரம் பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் அமெரிக்கா 25.45 லட்சத்துடன் முதல் இடத்திலும் இந்தியா 9.41 லட்சத்துடன் இரண்டாம் இடத்திலும் பிரேசில் 5.02 லட்சத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.