2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
இந்தியா தவிர மேலும் 9 நாடுகள் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
அதில், மெக்சிகோ (மெக்சிகோ சிட்டி, குவாடலஜாரா-மான்டேரி-டிஜுவானா), இந்தோனேசியா (நுசன்டாரா), துருக்கி (இஸ்தான்புல்), போலந்து (வார்சா, கிராகோவ்), எகிப்து ( புதிய நிர்வாக தலைநகரம்), மற்றும் தென் கொரியா (சியோல்-இஞ்சியோன்) ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் இந்த போட்டியை அகமதாபாத் நகரில் நடத்த விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, “2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. இது சம்பந்தமாக, முந்தைய ஒலிம்பிக்கில் விளையாடிய விளையாட்டு வீரர்களின் உள்ளீடு மிகவும் முக்கியமானது.
நீங்கள் அனைவரும் பல விஷயங்களைக் கவனித்து அனுபவித்திருப்பீர்கள். 2036 ஆம் ஆண்டிற்கான தயாரிப்பில் எந்த சிறிய விவரங்களையும் தவறவிடாமல் இருக்க, இதை ஆவணப்படுத்தி அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்” என்று கூறியது நினைவு கூறத்தக்கது.