டில்லி

ற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலைக்குச்  சென்றுள்ளதாக வந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது.

கொரோனா வைர்ஸ் பரவுதல் மொத்தம் நான்கு நிலைகளைக் கொண்டது ஆகும்   இதில் முதல் நிலை என்பது இறக்குமதி நிலை ஆகும். பாதிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு  நம் நாட்டில் உள்ளோர் செல்லும்போதோ அல்லது அங்கு வசிக்கும் நம் நாட்டினருக்கோ கொரோனா பாதிப்பு உண்டாவதாகும்.

இரண்டாம் நிலை என்பது உள்ளூர் பரவல் ஆகும்.  வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு வந்த நபர் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு வைரஸ் தொற்றி பாதிப்பை உண்டாக்குவதாகும்.   இந்த நிலையில் குறைந்த அளவில் மக்கள் பாதிப்பு அடைவார்கள்.  தற்போது இந்தியா இந்த நிலையில் உள்ளது.

மூன்றாம் நிலை என்பது சமூக பரவல் என அழைக்கப்படுகிறது.   இதில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து வராததால் தமக்கு கொரோனா இருப்பதே தெரியாமல் மற்றவர்களுடன் பழகி கொரோனாவை பரப்புவார்.    இதில் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிய முடியாது.  ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் இவ்வாறு பரவியது.

நான்காவது என்பது முழு அபாய நிலை ஆகும்.   இந்த நிலையின் போது யாரிடம் இருந்து யாருக்குப் பரவுகிறது என்பதே கண்டறிய முடியாத நிலை ஆகும்.   இந்த நிலையில் பலர் கொத்து கொத்தாக உயிர் இழப்பார்கள்.  சீன நாட்டின் வுகான் நகரில் இத்தகைய நிலை உண்டாகி பலர் மரணம் அடைந்தனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை  இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.   இதுவரை இந்த வைரஸ் சமூக பரவல் நிலைக்குச் சென்றுள்ளதாக எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை.  ஆயினும் இந்தியாவில்  கொரோனா தொற்று மூன்றாம் நிலையான சமூக பரவல் நிலைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள்  வந்தன.

இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி லவ் அகர்வால், “தற்போது இந்தியாவில் ஏங்குமே கொரோனா சமூக பரவல் நடக்கவில்லை.   இது உள்ளூர் பரிமாற்றம் மட்டுமே ஆகும். சிறு அளவில் உள்ளூரில் கொரோனா பரவி வருகிறது.  கொரோனா பாதிப்பு அபாயக் கட்டத்தை எட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.