ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

50 நாட்களில் இதை நிறுத்த வேண்டும் என்று இரண்டு வாரங்களுக்கு முன் இந்தியாவுக்கு அமெரிக்கா கெடு விதித்திருந்தது.

ஆனால், கடந்த வாரத்தின் நடுவே இந்த கெடுவை 10 நாட்களாக குறைத்ததுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் மகத்தான உறவைக் கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு கிடைத்து வரும் நிதியை நிறுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா மிகஅதிக வரிகளை விதித்து வருவதாகவும், அமெரிக்க குடியேற்ற முறையை “ஏமாற்றுவதாக”வும், சீனாவைப் போலவே ரஷ்ய எண்ணெயை வாங்குவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீபன் மில்லர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த, இராஜதந்திர ரீதியாகவும், நிதி ரீதியாகவும், வேறுவிதமாகவும் கையாள அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இருந்தபோதும், இந்தியா இதுவரை தனது எண்ணெய் நிறுவனங்களுக்கு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது தொடர்பாக எந்தவித உத்தரவும் இடவில்லை என்று தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.