புதுடெல்லி:

பெண் ஒருவர் உட்பட 20 பங்களாதேஷ் பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டுக்கு இந்தியா திருப்பி அனுப்பியது.


இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் மனபேந்திரா தேவ் ராய் கூறும்போது, கடந்த 2014-2018 வரை பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் அசாம் முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 6 பேர் இந்துக்கள், 14 பேர் முஸ்லிம்கள்.
20 பேரும் பிற்பகல் 1.30 மணியளவில் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது, இரு நாடுகளின் பாதுகாப்புப் படையினர் இருந்தனர்.

கடந்த ஜனவரி 19-ம் தேதி 21 பங்களாதேஷ் பிரஜைகள் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.