புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி ரன்களை குவிக்க திணறி வருகிறது. 42 ஓவர்களில் 218 ரன்களையே இந்திய அணி எடுத்துள்ளது.

அதேசமயம், 5 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. சிறிய மைதானமான புனே மைதானத்தில், குறைந்தபட்சம் 300 ரன்களாவது இருந்தால்தான், பந்துவீச்சாளர்களால் சமாளிக்க முடியும். இல்லையெனில் நிலைமை சிக்கல்தான் என்று கூறப்படுகிறது.

சதத்தை நெருங்கிவந்த ஷிகர் தவான், கெடுவாய்ப்பாக 98 ரன்களில் ஆட்டமிழந்தார். விராத் கோலி 56 ரன்களில் முன்னதாக அவுட்டானார்.

ஷ்ரேயாஸ் 9 பந்துகளில் 6 ரன்களை அடித்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 9 பந்துகளை வீணடித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். தற்போது கேஎல் ராகுலுடன், கருணால் பாண்ட்யா இணைந்து ஆடிவருகிறார்.

இந்த இருவரும் சரியாக ஆட தவறும் பட்சத்தில், இந்திய அணி குறைந்த இலக்கையே, இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இதுவரை 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.