டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்து 2212 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 4296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 67,161 ஆகி உள்ளது. நேற்று 111 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2212 ஆகி உள்ளது. நேற்று 1668 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 20,969 ஆகி உள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43,976 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1943 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,171 ஆகி உள்ளது நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 832 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 399 பேர் குணமடைந்து மொத்தம் 4199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 394 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,797 ஆகி உள்ளது இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 472 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 239 பேர் குணமடைந்து மொத்தம் 2091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 669 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,204 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 47 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 135 பேர் குணமடைந்து மொத்தம் 1959 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 381 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,923 ஆகி உள்ளது இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 73 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 49 பேர் குணமடைந்து மொத்தம் 2069 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 106 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,814 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 108 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 79 பேர் குணமடைந்து மொத்தம் 2241 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அருணாசல பிரதேசம் மிசோரம், மணிப்பூர் கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்கள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.