டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,58,086 ஆக உயர்ந்து 4534 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 7270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,58,086 ஆகி உள்ளது. நேற்று 187 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4534 ஆகி உள்ளது. நேற்று 3472 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 67,749 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,792 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2190 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,948 ஆகி உள்ளது நேற்று 105 பேர் உயிர் இழந்து மொத்தம் 1897 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 964 பேர் குணமடைந்து மொத்தம் 17,918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 817 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,545 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 136 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 567 பேர் குணமடைந்து மொத்தம் 9909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,257 ஆகி உள்ளது. நேற்று 15 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 303 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 310 பேர் குணமடைந்து மொத்தம் 7264 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 376 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,205 ஆகி உள்ளது இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 938 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 410 பேர் குணமடைந்து மொத்தம் 7549 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 280 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,816 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 172 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 286 பேர் குணமடைந்து மொத்தம் 4562 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.