டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,824 ஆக உயர்ந்து 6088 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 9633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,16,824 ஆகி உள்ளது. நேற்று 259 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6088 ஆகி உள்ளது. நேற்று 3786 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,071 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,654 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2560 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 74,860 ஆகி உள்ளது நேற்று 122 பேர் உயிர் இழந்து மொத்தம் 2587 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 996 பேர் குணமடைந்து மொத்தம் 32,329 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1286 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,872 ஆகி உள்ளது இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 208 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 630 பேர் குணமடைந்து மொத்தம் 14316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1513 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,645 ஆகி உள்ளது. நேற்று 59 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 615 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 299 பேர் குணமடைந்து மொத்தம் 9542 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 485 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,117 ஆகி உள்ளது இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 1122 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 318 பேர் குணமடைந்து மொத்தம் 12,212 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 279 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,652 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 209 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 309 பேர் குணமடைந்து மொத்தம் 6744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.