தாய்லாந்து தலைநகர் பாங்காக்-கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
100 மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் ஜோதி யர்ரார்ஜி தங்கப்பதக்கம் வென்றார்.

1500 மீ ஓட்டத்தில் அஜய்குமார் சரோஜ் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் தங்கம் வென்றனர்.
மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் ஐஸ்வர்யா மிஸ்ரா வெண்கலம் வென்றுள்ளார் தவிர 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
5 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவருக்கான டெகத்லான் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கல பதக்கம் வென்றார்.