டில்லி,

ந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய  சீனா எல்லைக்கோடு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன வீரர்கள் ஊடுருவ முயன்றபோது, அவர்களை இந்திய வீரர்கள் திருப்பி தள்ளியது பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல் இந்தியா-பூட்டான் எல்லையில் உள்ள இந்தியாவின் டோக்லாம்  பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதை வழக்கமாக கொண்டிருக்கிறது

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு துருப்புகளும் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா–சீனா இடையே 4 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. காஷ்மீர்  பகுதியில் மட்டும்  38 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இதுகுறித்து பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய ராணுவத்தின் பதுங்குகுழிகளை சீன ராணுவம் அழித்தது. இதன் காரணமாக இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.

இது குறித்து சீன நாளேடுகள் 1962ம் ஆண்டை போரை நினைவுபடுத்தி செய்திகள் வெளியிட்டுள்ளன. இதற்கு  இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியா 1962 ஆம் ஆண்டு போல்  இல்லை… 2017 ல் இந்தியா மிகவும் வித்தியாசமானது என கூறி  பதிலடி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தங்களது படை பலத்தை பறைசாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இரு நாடுகளிடமும் உள்ள படைபலம் குறித்த விவரங்கள்: