ஓவல்: உலகக்கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. ஷிகர் தவன் சதம் அடித்தார். ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலி ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 316 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
உலகக்கோப்பையில் இதுவரை தான் ஆடிய 2 ஆட்டங்களிலும், 2 வலுவான அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது.