சிங்கப்பூரில் பெண்களுக்கான 4வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று முடிந்தது. இறுதிப்போடியில் சீன அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல் முறையாக ஆசிய சம்பியன் பட்டதை கைப்பற்றியுள்ளது.
இந்திய மகளிர் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்ததுபோது, ஆட்டம் சூடு பறந்தது. போட்டி ட்ராவில் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில், இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடித்து இந்தியாவை வெற்றிக் அழைத்து சென்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.