புவனேஷ்வர்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புரோ ஹாக்கி லீக் போட்டியில், வலுவான பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்திய அணி.

தற்போது புரோ லீக் ஹாக்கித் தொடரின் இரண்டாவது சீஸன் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய ஹாக்கி அணி, உலகத் தரவரிசையில் 5ம் இடத்தில் இருந்து வருகிறது.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்த்து, புவனேஷ்வரில் விளையாடியது இந்திய அணி.

போட்டித் தொடங்கிய 2வது மற்றும் 46வது நிமிடத்தில் இந்திய அணி கோல்கள் அடித்து முன்னிலைப் பெற்றது. ஆனால், தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டிக் கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை மட்டுமே கோலாக்கியது பெல்ஜியம் அணி. இதனால், இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் வ‍ென்றது.

இந்தியா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய அணிகள் கலந்துகொள்ளும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் உலகின் பல முக்கியமான நகரங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.