விளாடிவோஸ்டோக்:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து முதன்முறையாக முப்படை ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விளாடிவோஸ்டோக் துறைமுகத்தில் அதற்கான பயிற்சி தொடங்கியுள்ளது.
இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தீவிரவாத ஒழிப்பு, பயங்கரவாதம் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யாவின் விளாடிவொஸ்தொக் துறைமுகத்தில் இரு நாடுகளின் முப்படைகளும் இணைந்து பயிற்சியை தொடங்கியது.
400 மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களும், ஐ.என்.எஸ் சத்புரா, ஐ.என்.எஸ் கத்மட் ஆகிய கப்பல்களும், இரண்டு அதிநவீன போர் விமானங்களும் ராணுவ பயிற்சியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டது.
10 நாள் நடைபெறும் ராணுவ கூட்டு பயிற்சியில் இந்தியா கலந்து கொண்டுள்ளதன் மூலம் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.