சென்னை: துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும்,  இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி   வரும் 24ந்தேதி (ஞாயிறு) சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, திமுக மற்றும்  கூட்டணி வேட்பாளர்களின் ஆதரவு கோருகிறார்.

நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவையைச் சேர்ந்த மூத்த பாஜக உறுப்பினர்  ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து,  தெலுங்கானாவைச் சேர்ந்த ஒய்வுபெற்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை  எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி களமிறக்கி உள்ளது. இவருக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் மாநிலங்களுக்கு சென்று ஆதரவு கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,     இந்தியா கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோர உள்ளார். அந்தவகையில் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 24) தமிழகம் வரவிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் வரவுள்ளனர்.