டெல்லி

ன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இந்தியா குட்டணி எம் பி க்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்துள்ளனர்.

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற எஞ்சிய 542 எம்.பி.க்களும் 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்குள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள். பதவியேற்பின் போது அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியா கூட்டணி எம் பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி  போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து,

“பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கும் தாக்குதலை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே தான் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடி நாங்கள் வந்துள்ளோம். பதவியேற்கும் போதும் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடியே பதவியேற்போம். இந்திய அரசியலமைப்பை எந்த அதிகார சக்திகளாலும் தொட முடியாது”

என்று தெரிவித்துள்ளார்.